தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கத்திற்கான காரணம் இது தான்: மனம் திறந்தார் மைத்திரி
தயாசிறி ஜயசேகர அனைவரையும் கவிழ்த்து கட்சியின் தலைவராக முற்பட்டதால் தான் அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அவரின் செயற்பாடுகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது, நிலைமையைக் கருத்திற் கொண்டு அவரை கட்சியின் செயலாளராக இனியும் வைத்திருக்க முடியாது.
மைத்திரியின் பதில்
ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும், குற்றப்பத்திரிகை அடுத்த வாரம் அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.” என்றார்.
அதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதமர் பதவியை எடுப்பதற்காகவா தயாசிறி ஜயசேகர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அவ்வாறான சிறுபிள்ளைத் தனமான கனவு தமக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.