கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவர் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By pavan
11 மாதங்கள் முன்
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று(22) இரவு இடம்பெற்றுள்ளது.
நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக மீனவர்கள் காவல்துறையினருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்