வீடொன்றில் இரு பெண்களது சடலங்கள்..!! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
76 வயதுடைய ஒருவரும், 73 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இருவரும் மர்மான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
