வெளிநாடு ஒன்றிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பெண் விமானத்திலேயே பலியான துயரம்
Bandaranaike International Airport
Sri Lanka
Qatar
Flight
By Sumithiran
a year ago
கட்டாரில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது சேவையை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிய வேளையில் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர் மொரட்டுவ, கோரல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய திருமணமாகாத பெண்ணாவார்.
இடைநடுவில் உயிரிழப்பு
இன்று (23ஆம் திகதி) அதிகாலை 01.17 மணியளவில் கட்டார் எயார்வேஸின் KR-662 என்ற விமானத்தில் கட்டார் டோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அந்த விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த போதே இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 8 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்