அரச களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த நெல்லை காணவில்லை
Kurunegala
Mahinda Amaraweera
By Jaso
குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த பாரியதொகை நெல் மூடைகள் காணாமற்போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு காணாமற்போன நெல் மூடைகளின் பெறுமதி பத்து இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் முறைப்பாடு
இது தொடர்பாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல் காணாமற்போனமை தொடர்பாக மூன்று நாட்களுக்குள் இது தொடர்பான பூரணமான அறிக்கையை தமக்கு ஒப்படைக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்