சவுதி விமான நிலையம் மீதான தாக்குதல் : 12 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம்

Saudi Arabia World
By Sathangani Oct 11, 2026 05:27 AM GMT
Report

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த தாக்குதலில் 309 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியாத் விமான நிலைய முனையத்தில் பாரிய தாக்குதல்! பலர் காயம்

ரியாத் விமான நிலைய முனையத்தில் பாரிய தாக்குதல்! பலர் காயம்

விமானங்கள் ரத்து

சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் 4 சவுதி பிரஜைகளும், 2 பங்களாதேஷ் பிரஜைகளும், அமெரிக்கா, ஜோர்தான், பலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலையடுத்து மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சவுதி விமான நிலையம் மீதான தாக்குதல் : 12 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம் | Houthi Attack On Saudi Airport Kills 12

ரியாத்துக்கான அனைத்து விமானங்களும் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளதுடன் சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான சேவை கண்காணிப்புத் தளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

குவைத் ஏர்வேஸ் உட்பட பல வளைகுடா விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்களே நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டிணைவுப் படையின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி, இது ஒரு முழுமையான போர்க் குற்றம் என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கடுமையான கண்டனம்

அத்துடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தனது நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, சவுதியில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் ஆகியவை, நிலைமை சீராகும் வரை விமான நிலையப் பகுதியைத் தவிர்க்குமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

சவுதி விமான நிலையம் மீதான தாக்குதல் : 12 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம் | Houthi Attack On Saudi Airport Kills 12 

யேமனில் சவுதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், அந்த நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் அண்மைய நாட்களாக தீவிரமடைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக சவுதியின் இரு விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் விமானி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்னதாக கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் மூவர் பலியாகியிருந்தனர். சனிக்கிழமையன்று தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும் எறிகணை ஒன்று விழுந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.

சவுதி அரேபியா தனது கடல் எல்லைகளில் விதித்துள்ள முற்றுகைக்கும், ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதலுக்கும் பதிலடியாகவே சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018