வத்தளையில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் கைது
Sri Lanka Police Investigation
Drugs
Arrest
By Pavi
வத்தளை, மாபோல பகுதியில் 18 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர்
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 9 கிலோ 229 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோ 264 கிராம் ஹெரோயின், போதைப்பொருட்களை எடைபோடுவதற்குப் பயன்படுத்தப்படும் தராசு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்