தென்மராட்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Laksi
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வரணி - இயற்றாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவமானது நேற்று (22) இடம்பெற்றுள்ளது.இதில் அப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மேற்படி இளைஞர் தனது வீட்டில் நேற்று(22)மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்