ஹமாஸ் அதிரடி தாக்குதல் : இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு (காணொளி)
காசாவில் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் இராணுவத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.
இதன்படி நடைபெற்று வரும் மூன்று மாதகால போரில் ஒரே நேரத்தில் 21 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அதிரடி தாக்குதல்
திங்கட்கிழமை (22) மாலை 04 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹமாஸ் அமைப்பினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் வெடிப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தபோது, ஹமாஸ் அமைப்பினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
10 பேரின் பெயர் விபரங்களை
இவ்வாறு உயிரிழந்தவர்களின் 10 பேரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.
In this video, Al-Qassam fighters are seen clashing with Israeli military vehicles and forces in the eastern areas of Jabaliya Al-Balad in the northern Gaza Strip. pic.twitter.com/5042KBP21E
— The Palestine Chronicle (@PalestineChron) January 22, 2024
ஏனையோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |