வயல் காவலுக்காக சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!
வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு (15) புளியங்குளம், புதூர் பகுதியில் உள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.
இன்று (16) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
