வயற்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலம் - விசாரணை தீவிரம்
Sri Lanka Police
Death
By pavan
முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து சடலம் ஒன்று நேற்றிரவு(16) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை காணவில்லை என தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மேலதிக விசாரணை
துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
