மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் மரணம் - யாழில் சம்பவம்
Sri Lanka
Death
By pavan
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரிய விளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(25) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு நீர்பம்பியை இயக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறை விசாரணை
இதில் செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது 60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
