குடும்பத்தகராறு காரணத்தால் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்!
புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவ்ம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய நுவரெலியா ஈட்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவரெனவும் புத்தளம் கடையாக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெளியான காரணம்
குடும்பத் தகராறு காரணமாகவே கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் காவல்துறையினர் இதன்போது தெரிவித்தனர்.
