மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை
மனைவிக்கு பெட்ரோல் ஊற்றி எரித்து அவர் உயிரிழக்க காரணமான கணவனுக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது மொனராகலை மேல் நீதிமன்றம்.
மொனராகலை, ஹுலந்தாவ தெற்கு, கெமுனுபுரவைச் சேர்ந்த யடபாலகே நீல் ஸ்டான்லி ஜெயரத்ன என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகர, கடந்த வெள்ளிக்கிழமை (16)வழங்கினார்.
09 வருடத்திற்கு முன்னர் நடந்த சம்பவம்
2017 ஆம் ஆண்டு தனது மனைவி கே.எம். சுஜாதா மீது குற்றம் சாட்டப்பட்டவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மனைவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

நீதிபதி மரண தண்டனை விதித்தார்
கொலை குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சந்தேக நபருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்தார்.

சட்டத்தரணி சோமரத்ன ஹேரத் பிரதிவாதிக்காக முன்னிலையானார். அதே நேரத்தில் அரசு வழக்கறிஞர் துமிந்த டி அல்விஸ் வழக்குத் தொடர தலைமை தாங்கினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |