தொலைபேசி உரையாடலால் தொடருந்தில் மோதி 16 வயது மாணவன் பலி!
Kandy
Accident
Death
By Dharu
கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தில் குறித்த மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டி, மாதபோவல பிரதேசத்தை சேர்ந்த கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மாணவன் கைப்பேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் செல்லும் மேம்பாலத்தில் செல்லாமல் தொடருந்து வீதியை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் அடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவனின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி