நியூசிலாந்தில் கடும்மழை... மண்சரிவில் சிக்கி பலர் மாயம்
நியூசிலாந்தின் சுற்றுலாத் தளமான மவுண்ட் மவுங்கானுய் (Mount Maunganui) பகுதியில் உள்ள ஒரு முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் சிக்கி எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பதை இன்னும் உறுதியாகக் கூற முடியவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புக் குழுக்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதாகவும் நிலத்தின் உறுதியற்ற தன்மையால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளத்தில் மூழ்கிய ஸ்வாட் பகுதி
நியூசிலாந்தில் பெய்த கனமழையால் வடக்குத் தீவு முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்குத் தீவின் ஸ்வாட் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாட்டின் தேசிய வானிலை சேவை பல பகுதிகளுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மவுண்ட் மவுங்கானுய் அமைந்துள்ள விரிகுடா பகுதியில் இன்று (22) மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதுடன் 12 மணி நேரத்தில் இரண்டரை மாதங்களுக்குப் போதுமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |