பொருளாதார நெருக்கடி - மின்சாரசபை ஊழியர்கள் செய்த தியாகம்
Ceylon Electricity Board
Public Utilities Commission of Sri Lanka
Money
By Sumithiran
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கே பெரும் திண்டாட்டத்தில் உள்ளது அரசாங்கம்.
அரசாங்கத்தின் பல்வேறு தேவைகளுக்காக பெருமளவு பணம் புதிது புதிதாக அச்சிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக கொடுப்பனவு
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022ம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பல பில்லியன் ரூபா சேமிப்பு
இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்