குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
எதிர்காலத்தில் மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலால் திணைக்களம் (Excise Department Of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1000 ரூபாவினாலும், 175 மில்லி லீட்டர் போத்தலின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் கலால் ஆணையாளருக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மதுபான போத்தல்
இதன் போது, மதுபான உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின் விலை குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என கலால் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களின் விலையில் 80% மற்றும் 90% VAT மற்றும் பிற வரிகளை உள்ளடக்கியுள்ளதாக மது நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன .
கடந்த 2023 ஜூலை 1ஆம் திகதி மதுபான போத்தல்களின் விலையினை அதிகரித்து விசேட வர்த்தமானி ஒன்றும் வெளியிடப்பட்டது.
அதன் படி அதிவிசேஷ மதுபான போத்தல் ஒன்றின் விலை 1000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |