ராஜிதவுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரரின் சட்டத்தரணிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு முன்பிணை வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்த உத்தரவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மணிக்கு பிறப்பிக்கப்படும் என்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதைத் தடுக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
ரூ.26.2 மில்லியன் நட்டத்தை அரசுக்கு ஏற்படுத்திய மணல் அகழ்வுத் தொகுதி ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், ராஜித சேனாரத்ன கைது இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக அண்மையில் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்தது.
முன்பிணை தொடர்பான முடிவு
அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தொலைபேசி எண்ணை துண்டித்துவிட்டு, தனது வீட்டை விட்டும் வெளியேறி, பலமுறை அனுப்பிய அழைப்பாணைகளை புறக்கணித்துள்ளதாகவும் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், ராஜித சேனாரத்ன தாக்கல் செய்துள்ள முன்பிணை தொடர்பான முடிவு இன்ற பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்கப்படும் என கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

