பெண்கள் மீதான அத்துமீறல்: அறிமுகமாகியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்
இலங்கையில் பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல்களை முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் மின்னஞ்சல் முகவரி ஒன்றினையும் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி 109 என்ற சிறப்பு தொலைபேசி எண் அல்லது cwb.on என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.
இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசேட தொலைபேசி இலக்கம்
பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான 1,077 முறைப்பாடுகள் 2024 ஜனவரி 04 முதல் மார்ச் 10 வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதில் 477 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 42 முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 550 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |