தீபச்செல்வனின் நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீடு
கிளிநொச்சியில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு இன்று (17.01.2026) சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வை தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தலைமை வகிக்கவுள்ளார்.
இந்தநிகழ்வில் பிரதம விருந்தினர்களாகப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐபிசி தமிழ் மற்றும் றீச்சாவின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் மற்றும் சிங்கள எழுத்தாளர் திலீனா வீரசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கவிதை நூல் தொடர்பான விமர்சனவுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல். நந்தகுமார் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |