முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீட்டு அறிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பொது பாதுகாப்பு அமைச்சினால் மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படும் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |