புத்தாண்டு தினத்தில் கொழும்பில் இடிக்கப்பட்ட பிரபல ஹோட்டல் (படங்கள்)
Sri Lanka Police
Colombo
By Sumithiran
தெஹிவளையில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அதிகாரிகள் அதனை இடித்து அகற்றியுள்ளனர்.
இந்த கடற்கரையோர ஹோட்டல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறையின் உதவியுடன்
காவல்துறையின் உதவியுடன் கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் அதிகாரிகளால் இன்று (ஜன 01) ஹோட்டல் இடிக்கப்பட்டது.
கடமைகளுக்கு இடையூறு விளைவித்த
விடுதியில் உள்ள அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்றி இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் மற்றும் இருவர்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்