இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேருக்கு விளக்கமறியல்
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 35 கடற்றொழிலாளர்களையும் இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு (08) குதிரைமலைப் பகுதியில் வைத்து நான்கு விசைப்படகுகளுடன் இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 கடற்றொழிலாளர்களும் கற்பிட்டி விஜய கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டு புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதவான் உத்தரவு
இதன்பின்னர் நேற்று (09) மாலை புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் அயோனா விமலரத்ன உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை கடந்த 5ஆம் திகதி இரண்டு விசைப்படகுகளுடன் இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் குதிரைமலைப் பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |