இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்; எச்சரிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
இலங்கையில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் பல டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதுடன், 1,602 டெங்கு நோயாளர்கள் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள்
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்த்தில் மட்டும் 390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்ற வாரம், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கல்முனை மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய வலையங்கள் அறிவிப்பு
இதுவரை மொத்தமாக இலங்கை முழுவதும் 68,928 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் இருமடங்கில் டெங்கு தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.