யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) நேற்று முன்தினம் (27) தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் யாழ் மாவட்டத்தில் இரண்டு தினங்கள் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வலி வடக்கு பிரதேச சபை செயலாளர் சுதர்ஜன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் உமாசுதன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
எனினும் குறித்த பகுதியில் எந்தவொரு டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையிலும் குறித்த பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதனைப் போன்று ஏனைய பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் டெங்கு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |