ரஷ்யா தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: அதிரப்போகும் ஐரோப்பிய நாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தலையீட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வர உள்ள நிலையில், ரஷ்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் (Russia) அடுத்த போர் நடவடிக்கை பற்றிய திடுக்கிடும் தகவலை டென்மார்க் (Denmark) உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரஷ்யா விரைவில் இரண்டு ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க தேவையான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக டென்மார்க் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் முயற்சி
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை போல் ரஷ்ய - உக்ரரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் முயற்சி செய்து வருகின்ற நிலையில், ரஷ்ய விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin), தொலைபேசியிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இவ்வாறனதொரு பின்னணியில், உக்ரைன் மீதான போர் நிறுத்தத்துக்கு பிறகு ரஷ்யா ஐரோப்பின நாடுகளான ஜார்ஜியா, மால்டோ மீது போரை தொடங்க திட்டமிட்டுள்ளதாக டென்மார்க் எச்சரித்துள்ளது.
நேட்டோ படைகளின் பாதுகாப்பு
இந்த போர் நடவடிக்கைக்கான சரியான காலக்கட்டத்தை ரஷ்யா எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் குறித்த நாடுகள் மீது போரை தொடங்களாம் என்றும் அதன்போது தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இந்த 2 நாடுகளும் நேட்டோ படையில் இல்லாவிட்டாலும் அந்த நாடுகளை சுற்றியுள்ள பிற ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படைகளில் உள்ளன.
குறிப்பாக ரோமானியா உள்ளிட்ட நாடுகள் நேட்டோவில் உள்ளதால் ஜார்ஜியா, மால்டோ மீது போர் தொடங்கினால் பிற ஐரோப்பிய அண்டை நாடுகள் இருநாடுகளுக்கும் உதவி செய்யலாம் என்றே கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)