ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல்துறை மா அதிபர்
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்களுடைய மற்றும் இறந்தவர்களுடைய வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினமான இன்று(31) கட்டுவபிட்டிய தேவாலயத்திற்கு அவர் சென்றிருந்த நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மற்றும்மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இன்று வரை இலங்கையர்கள் மத்தியில் நீங்காத வடுக்களை சுமந்துள்ளது.
தற்கொலைதாரிகள்
தேவாலயங்கள் மாத்திரம் அல்லாது கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொழும்பில் 40 உயிரிழந்ததோடு காயமடைந்த 295 பேரில் பலர் இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடிப்பு
இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 93 பேர் உயிரிழந்திருந்திருந்ததுடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் 27 உயிரிழந்ததோடு 73 காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 மொத்தமாக காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |