நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சின்ன வடிவமைப்பு போட்டி : வெற்றியாளருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!
மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த போட்டியில் உருவாக்கப்படும் சின்னத்தில் பின்வரும் குறிப்புக்கள் பிரதிபலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் , சுயநிர்ணய உரிமை , ஜனநாயகம் மற்றும் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் “தமிழர்களின் முடிவெடுக்கும் உரிமை” “TAMILS RIGHT TO DECIDE” வசனங்கள் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சேர்க்கப்பட வேண்டும்.
சின்ன வடிவமைப்பிற்கான விதிமுறைகள்
- சின்னம் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில், உரை உட்பட தெளிவாகப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
- சின்னம் பல வண்ணங்களில் (மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட வேண்டும்) இருக்க வேண்டும்.
- சின்னம் சதுர அல்லது வட்ட வடிவத்தில் இருக்கலாம். சின்னம் முற்றிலும் தனித்துவமான சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
- சின்னம் உயர் தெளிவுத்திறன் கொண்ட வடிவத்தில் (JPEG, PNG அல்லது VECTOR கோப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த போட்டியில் வெற்றியிட்டுபவர்களுக்கு முதல் பரிசாக $1,000 அமெரிக்க டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆக்கங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதி திகதி 15.04. 2025 என்பதுடன், pmo@tgte.org எனும் மின்னஞ்சலுக்கு இந்த ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)