ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டோனி! சென்னையின் தலைமையை ஜடேஜாவிடம் கையளித்தார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க தோனி முடிவுசெய்துள்ளார்.
இருப்பினும் இந்த சீசனும் அதற்கு அப்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார் என சி.எஸ்.கே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2008ம் ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அனைத்து அணிகளும் தங்களது தலைமைகளை மாற்றிய போதும் இன்றுவரை மாறா ஒரே தலைவராக மஹேந்திர சிங் டோனி திகழ்கிறார்.
இதில் 4 முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது. இந்த 12 தொடர்களில் ஒரே ஒருமுறை மட்டுமே பிளே ஓஃப் சுற்றுக்கு சென்னை தகுதி பெறவில்லை. ஒன்பது முறை இறுதிப்போட்டியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது.
நாற்பது வயதாகும் மஹேந்திர சிங் தோனி, கடந்த 2014 ஆம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
2017 ஆம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர் 2020 ஆம் ஆண்டு வரை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. அதுவே தோனி தலைவராக அவர் விளையாடிய இறுதிப் போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது நீண்ட கால மாறா தலைமை பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார் டோனி.
2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒருங்கிணைந்த அங்கத்தவராக இருந்து வரும் ஜடேஜா சி.எஸ்.கேயின் புதிய தலைவராக செயற்படுவார்.
? Official Statement ?#WhistlePodu #Yellove ?? @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
