கொழும்பில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் -பொங்கியெழுந்த மனோகணேசன்

Sri Lanka Police Sri Lankan Tamils Colombo Parliament of Sri Lanka Mano Ganeshan
By Sumithiran Nov 23, 2022 06:01 PM GMT
Report

  கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே காவல்துறை பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு காவல்துறை அமைச்சர் டிரான் அலசுக்கும் இடையில் இன்றையதினம் நாடாளுமன்றில் கடும் சொற்போர் இடம்பெற்றது.

இதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை நாடாளுமன்றம் அனுப்பியது, தேங்காய் துருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்.." என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சீற்றத்துடன் தெரிவித்தார்.

அதிபர், பிரதமர் அலுவலகங்கள், காவல்துறை ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு- செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன், 

பலரிடமும் முறைப்பாடு

கொழும்பில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் -பொங்கியெழுந்த மனோகணேசன் | Did Not Come Pluck Coconuts Or Hit Snakes Mano

கொழும்பு நகரில் வீடு வீடாக செல்லும் காவல்துறையினர் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி அதிபருக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். காவல்துறை மாஅதிபருக்கு கூறியுள்ளேன்.காவல்துறை ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கிறாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை.

கீழ்மட்ட காவல்துறை பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறித்தான் செய்கிறோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம் . இன்று யுத்தம் இல்லை. பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகிறீர்கள்? கதவு கதவாக போகிறீர்கள்?

  நாடாளுமன்றில் கிரிமினல்கள்

கொழும்பில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் -பொங்கியெழுந்த மனோகணேசன் | Did Not Come Pluck Coconuts Or Hit Snakes Mano

கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த நாடாளுமன்றத்தில் இல்லையா? கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள். அதுபோல் காவல்துறையிலும் உள்ளார்கள். காவல்துறைக்கு வழங்கும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆகவே அது வேண்டாம். எனது மாவட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் நடவடிக்கைக்கு இடம் தர எனக்கு முடியாது.

 குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைத்தான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

எல்லோர் வீடுகளுக்கும் காவல்துறை செல்கிறது

கொழும்பில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் -பொங்கியெழுந்த மனோகணேசன் | Did Not Come Pluck Coconuts Or Hit Snakes Mano

இதன்போது இடைமறித்த அமைச்சர் டிரான் அலஸ், எம்பி அவர்களே, இது எப்போதும் நடக்கும் ஒரு கைங்கரியம். வெளியூரில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார் என்றால் அது அறிய காவல்துறையினர் தகவல் சேகரிக்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, நாடு முழுக்க நடக்கிறது. தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எல்லோர் வீடுகளுக்கும் காவல்துறை போகிறது என்றார். 

தமிழர்களே இலக்கு

கொழும்பில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் -பொங்கியெழுந்த மனோகணேசன் | Did Not Come Pluck Coconuts Or Hit Snakes Mano

இதற்கு பதிலளித்த மனோகணேசன், இல்லை, இல்லை. தமிழர்களையே இது அதிகம் குறி வைக்கிறது. சும்மா இங்கே வந்து கூறுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா? நீங்கள் சொல்வது போல், இது நாடு முழுக்க நடக்கவில்லை. சும்மா சொல்ல வேண்டாம். இங்கே உள்ள ஏனைய 225 எம்பிக்களிடமும் கேட்டுப் பாருங்கள். நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இதனை நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை. ஆனால், எனக்கு தெரிகிறது. ஏனெனில் நான் மக்கள் மட்டத்தில், மத்தியில் இருப்பவன். இதை நீங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம். 

 வீடு வீடாக போகவேண்டாம்

கொழும்பில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் -பொங்கியெழுந்த மனோகணேசன் | Did Not Come Pluck Coconuts Or Hit Snakes Mano

சரி, “செக்” செய்து பார்ப்பதாக, பரிசோதனை செய்து பார்ப்பதாக இப்போது கூறுகிறீர்கள். ஒலிவாங்கியை அணைத்து விட்டு கூறுகிறீர்கள். பாருங்கள். குற்றவாளியை தேடி சென்று கைது செய்யுங்கள். விசாரியுங்கள். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீடு வீடாக பொதுவாக போவதற்கு இடம் கொடுக்க முடியாது என தெரிவித்தார். .  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017