எரிபொருள் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் உயிரிழப்பு: வெளியான பின்னணி
Sri Lanka Police
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
19 வயதுடைய இளைஞர்
அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையிலேயே கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி