வவுனியா மதுபானசாலையில் நடந்த கொலை - தீவிர விசாரணையில் காவல்துறை
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18) உயிரிழந்த நபர் மீது அங்கிருந்த இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (20) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய தங்கராசா பிரதீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

அதேவேளை, பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளமையுடன் சிசிரிவி உதவியுடன் மற்றைய சந்தேகநபரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.