புதிய கட்சியை ஆரம்பிக்கும் மகிந்தவின் சகா: ஆதரவு தெரிவித்த கோட்டாபய
இலங்கையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கலாம் என கருதப்படும் நிலையில், ராஜபக்ச விசுவாசியும் ஊடக நிறுவன தொழிலதிபருமான திலித் ஜயவீர, தமது அரசியல் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தாய்நாட்டு மக்கள் கட்சியின் ஆரம்ப விழா நேற்று(5) காலி மாநகர சபை கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளரும் தீவிர ராஜபக்ச ஆதரவாளருமான திலித் ஜயவீர அரசியலில் ஈடுபடுவது தொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
திடீரென குதிக்கவில்லை
இதன் ஒரு பகுதியாக மௌபிம ஜனதா கட்சியின் உத்தியோகப்பூர்வ ஆரம்ப விழாவை காலியில் நடத்தியதன் மூலம், தாம் ஒரு பெரும்பான்மையின ஆதரவாளர் என்பதை திலித் ஜயவீர வெளிக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது கட்சியான மௌபிம ஜனதா கட்சி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் கலாச்சாரத்தை மற்றும் வகையில் தமது கட்சி செயல்படுமென கட்சி ஆரம்ப விழாவில் உரையாற்றிய திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் அரசியலுக்குள் திடீரென குதிக்கவில்லை எனவும் தமக்கு 30 வருட அரசியல் அனுபவம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.