தினேஷ் சாப்டர் மரணத்தில் தொடரும் மர்மம்..!
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பாக நடத்தப்பட்ட மாஜிஸ்திரேட் விசாரணையின் போது கூட, அத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, உட்கார்ந்திருக்கும்போது கழுத்தை நெரித்தால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை கொலைகள் எனவும், ஒருவர் கயிற்றில் தொங்காமல் அமர்ந்திருக்கும் போது கழுத்தை நெரித்து மரணங்கள் ஏற்பட்டதை பிரேத பரிசோதனை செய்த அனுபவங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் கிட்டத்தட்ட கொலைகள் என்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சன்ன பெரேரா கூறியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
