வரவு - செலவுத் திட்ட உரை: வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியின் திட்டத்தில் கருத்து வேறுபாடு
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரையை புறக்கணிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவ்வாறு எதிர்ப்பை பதிவு செய்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என பிறிதொரு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரை தொடர்பில் கலந்துகொள்வதா அல்லது வெளிநடப்பு செய்வதா என்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு கலந்தாலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவு - செலவுத் திட்ட உரை
எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பிக்கும்போது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம் என்று கட்சியின் ஒருசில உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

பிறிதொரு தரப்பானது வரவு - செலவுத் திட்டம் நாட்டுக்கு முக்கியமானது. ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்வது தவறானதொரு முன்னுதாரணமாக அமையும். ஆகவே ஜனாதிபதி உரை நிகழ்த்தும்போது சபையில் இருப்பது அவசியமாகும் யோசனை முன்வைத்துள்ளது.
வரவு - செலவுத் திட்ட உரை முடிவடைந்ததன் பின்னர் சம்பிரதாயபூர்வமாக இடம்பெறும் தேநீர் விருந்தில் பங்குபற்றாமல் இருப்பது தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |