கனடாவில் நிரந்தர வதிவிடம் கோரி விண்ணப்பித்த பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்
கனடாவில் நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பம்
கனடாவில் நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பித்த குடுமபத் தலைவி ஒருவரின் விண்ணப்பம் எங்குள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
பிலிப்பைன்சில் வாழ்ந்துவந்த ஒரு தம்பதியர் கனடாவில் குடியமர முடிவு செய்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டவரான May Ellen Limஇன் கணவரான Michael Quinlan ஒரு கனேடியர். ஆனால், Michael 21 ஆண்டுகளாக சர்வதேசப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். கடைசியாக அவர் பணியாற்றிய இடம் பிலிப்பைன்ஸ். அங்குதான் அவர் Limஐ சந்தித்தார். இருவரும் காதலித்துத் திரும்ணம் செய்துகொண்டார்கள்.அவர்களுக்கு இப்போது ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
கொவிட் காலகட்டம்
கொவிட் காலகட்டம் தொடங்கியதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கொவிட்டை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லாததால் தங்கள் மகளுடன் கனடாவை வந்தடைந்தனர் தம்பதியர். கால்கரியில் குடியமர்வதற்கு முன், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் Limக்கு நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பித்தார்கள் .
அதிர்ச்சியளித்த தகவல்
ஆனால், ஓராண்டு ஆனபிறகும் எந்த பதிலும் இல்லை. சரி, விண்ணப்பம் என்ன நிலையிலிருக்கிறது என்பதைக் குறித்து விசாரித்து அறிந்துகொள்ளலாம் என சேவைகள் கனடா அமைப்பை அணுகிய Limக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி வந்தது.
அது என்னவெளில் Limஉடைய விண்ணப்பம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். அது இன்னமும் கணனியில் பதிவேற்றம் செய்யப்படாமலே யாரோ ஒரு அலுவலருடைய மேசையிலேயே இருக்கிறதா? அல்லது அது தொலைந்து போனதா? என எந்த தகவலும் தெரியாமல் பரிதவித்தபடி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள் தம்பதியர்.
