20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொன்று குவிப்பு - உக்ரைன் வெளியிட்ட தகவல்
Vladimir Putin
Russo-Ukrainian War
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் 2,162 இராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய இராணுவத்தின் 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி