தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல்

Sri Lanka Police Sri Lanka Deshabandu Tennakoon
By Sathangani Dec 24, 2023 09:28 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை, நடைமுறைப்படுத்துவதில் சட்டசிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த தடையை நீக்கும் வகையில் குறித்த தீர்ப்பின் சட்டசிக்கல் விடயங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் நபர் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறிய நான்கு அதிகாரிகளில் ஒருவராக தற்போதைய பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

உயர்நீதிமன்றம் உத்தரவு 

இதனையடுத்து அவருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

high court உயர் நீதிமன்றம் sri lankaஇலங்கை

எனினும், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு தேசபந்து தென்னகோன் பதில் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுப்பதில் தேசிய காவல்துறை ஆணைக்குழு, சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 41ஆவது சரத்தின் இ (1) பிரிவுக்கமைய, அதிபரின் பரிந்துரையின் பேரில் அரசியல் அமைப்பு பேரவையின்; அங்கீகாரத்துடன் மட்டுமே காவல்துறைமா அதிபர் பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படுகிறது.

இதேவெளை, 41ஆவது சரத்தின் இ (2) பிரிவுக்கமைய, பதில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அலுவலரின் பதவி, அவர் நியமிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பின்னரே, அந்த பதவி பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் சீரற்ற காலநிலை: பெருமளவு நெற்செய்கை நிலங்கள் நாசம்

வடக்கில் சீரற்ற காலநிலை: பெருமளவு நெற்செய்கை நிலங்கள் நாசம்

தேசிய காவல்துறை ஆணைக்குழு

அதன்படி, பதில் காவல்துறை மா அதிபர் தென்னகோனின் நியமனம் மூன்று மாதங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனம் ஏற்கனவே நிரந்தரமாக கருதப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல் | Disciplinary Action Against Deshabandu Tennakon

21வது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, காவல்துறைமா அதிபர் தவிர்ந்த ஏனைய காவல்துறை அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றங்கள், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றில் ஆணைக்குழு பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சட்டரீதியாக அதிகாரம் உள்ளதா? அத்தகைய அதிகாரம் தமக்கு வழங்கப்படாவிட்டால், அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பியே, தேசிய காவல்துறை ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றத்தின் உத்தரவை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து தெளிவுபடுத்துமாறும் தேசிய காவல்துறை ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கும் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் ரணிலின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

அதிபர் ரணிலின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024