தேசிய மக்கள் சக்தி - தமிழரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல்: நிராகரிக்கும் சிறீதரன் எம்.பி
தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசு கட்சிக்கு இடையிலான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மக்கள் சந்திப்புத் தொடரின் போது இந்த சந்திப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த கலந்துரையாடல்கள் இவ் வாரம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடமாகாண மாநாடு
எவ்வாறாயினும், இதுவரையில் தமக்கு அவ்வாறான அழைப்பு வரவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடானது, நாளைய தினம் (04.04.2024) இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |