மனைவியுடன் தகராறு - கணவன் செய்த செயல்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டினை கொளுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மொறட்டுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை, கடலான பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தன் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, கணவன் வீட்டினை கொளுத்தி உள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
கணவனின் இந்த செயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளின் புத்தகங்களும் தீயில் கருகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி