வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் : துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவு
வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டால் துப்பாக்கி சூட்டை நடத்துமாறு கடமையில் உள்ள படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(tiran alles) தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
வாக்களிப்பு தினத்தன்றும் அதன் பின்னரும் நாட்டின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக முப்படையினரும் களமிறக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் போது
இதேவேளை, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்