ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள் : எதிரணிக்கு அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை
பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவித்தார்.
தற்போதைய NPP அரசானது எந்தவொரு நிலையிலும் பலவீனமான ஓர் அரசு அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசின் நிர்வாகப் பொறிமுறையும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல
நாட்டின் பெரும்பான்மை மக்களின் பலமான ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல.

ஜனநாயக ரீதியாக மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணையைக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள்
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய போலிப் பிரசாரங்களைக் கண்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசின் பயணத்தைத் தடுக்க முடியாது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |