வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை தெரியுமா.....
நாம் அனைவரும் நமது வீட்டுச் சூழலை அழகாக வைத்திருப்பதற்காக மரம், செடி, கொடிகள் என்பவற்றை வளர்ப்பது சாதாரண விடயமாகும்.
ஆனால் சில மரங்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதால் அவற்றை வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். அந்த மரங்கள் எவை என்பது குறித்து பின்வருமாறு நோக்கலாம்.
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் அரசமரம் வைப்பது தீங்கு விளைவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பணப் பிரச்சினை மற்றும் பண விரயம் ஏற்படலாம்.
நச்சு பூச்சிகளை கவர்ந்திழுக்கும்
வீட்டின் அருகிலே புளியமரம் இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் இடத்தில் வீடு கட்டுவதைத் தவிர்த்து விடுவது நல்லது. தென்னை மரத்தை வீட்டில் ஒற்றைப்படையில் வைக்கக்கூடாது. தென்னை மரத்தை ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டும்.
பனைமரம் இருக்கும் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல், தலைக்கு மேல் கடனும் ஏறிக்கொண்டே போகும். இலந்தை மரத்தை ஒருபோதும் வீட்டில் வைக்கக்கூடாது. இது வீட்டின் அமைதியை சீர்குலைக்கும்.
நாவல் மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், அது மிகவும் குளிர்ச்சியான தன்மை வாய்ந்த மரம் என்பதால் நச்சு பூச்சிகளை கவர்ந்திழுக்கக் கூடிய தன்மையை உடையது. அதனால் அந்த பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வரும் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டது.
துரதிர்ஷ்டத்தை தரும்
அத்தி மரத்தையும் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், இது வௌவால்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்பதால் நிறைய வௌவால்கள் வரும். அதனால் நோய்கள் ஏற்படும் என்பதால் சொல்லப்பட்டது.
முட்கள் இருக்கும் செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. கள்ளிச்செடி துரதிர்ஷ்டத்தையும், கஷ்டத்தையும் தரும் என்று கூறுகிறார்கள். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தால் கருவேப்பிலை மரத்தை வளர்க்கலாம். அப்படியில்லையேல் கருவேப்பிலை மரம் வளர்க்கக் கூடாது.
எதிர்மறை சக்திகளை ஈர்க்கும்
உடனே காய்ந்து விடக்கூடிய தாவரங்களையோ செடிகளையோ வீட்டில் வளர்க்கக் கூடாது. உதாரணத்திற்கு காகிதப்பூ எதிர்மறையான சக்திகளை ஈர்க்கக் கூடியது.
சிவப்பு நிற அரளியை வீட்டில் வைப்பதால் குடும்பத்திற்குள் சண்டை வரும். அதனால் அதை வீட்டில் வைப்பதை தவிர்க்கவும். தாழம்பூ செடி, செண்பக மரம் ஆகியவற்றிலிருந்து வரும் அதிக மணம் நாகங்களை கவரக்கூடியது என்பதால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறுவார்கள்.
முருங்கை மரத்தை வீட்டின் வாசல் அருகில் வைக்கக்கூடாது. வீட்டின் பின்புறத்தில் வைப்பதே சிறந்ததாகும்.
நம்முடைய வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தாலும், சில நேரங்களில் நோய், பணக்கஷ்டம், சண்டை போன்ற பிரச்னைகள் வரக்கூடும். அதற்குக் காரணம் நாம் சில நேரங்களில் விபரம் அறியாமல் இதுபோன்ற வீட்டில் வைக்கக் கூடாத மரம், செடியை வைத்திருப்பதே காரணமாக இருக்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 12 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)