ரணிலை சந்திக்கவுள்ள வைத்தியர் அர்ச்சுனா: முடிவிலியாக தொடரும் சர்ச்சை
சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ( (Ranil Wickremesinghe) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சந்திப்பானது இன்று (14) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை
அத்துடன், நேற்றையதினம் (13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து வடக்கு சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நாளையதினம் (15) ஆம் திகதி சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வடக்கு மருத்துவத்துறையை ஊழல் மோசடிகளில் இருந்து காப்பாற்றுவார்களா என்ற ஆவல் மக்களிடத்தே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |