கனடாவில் இசையால் நோயாளிகளை கவரும் ஈழத் தமிழ் மருத்துவர்! குவியும் பாராட்டுகள்
கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் கடந்த சில ஆண்டுகளாகவே இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
விசேட தேவையுடைய சிறார்கள்
வெளியிட்ட இசைத் தொகுப்புகளின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஓட்டிசம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரெஜின், மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ரப் இசைக்கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.
இவர் தனது இசை மூலம் விசேட தேவையுடைய சிறார்களுக்காக பாடல்களை வெளியிட்டு நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளிகளின் நிலைமை
கடந்த 2017ம் ஆண்டு முதல் இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வரும் அவர், நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகள், அவர் ரப் இசைக்கலைஞர் என்பதனால் இலகுவில் தன்னுடன் நட்புறவாகி விடுவதாகவும் இதனால் சிகிச்சை அளிப்பதற்கு இலகுவாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது உறவினர் ஒருவர் ஓட்டிசம் நோயினால் பாதிக்கபட்டிருந்தார் எனவும் இதனால் நோயாளிகளின் நிலைமை தமக்கு நன்றாக தெரியும் எனவும் ரெஜின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிலும் இசைத் தொகுப்புகள் மூலம் ஒரு மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |