கொரோனா நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்த மருத்துவரும் மரணம்
srilanka
corona
death
doctor
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்று திவிரமாக பரவி வருகிறது.இதில் நாளாந்தம் உயிரிழப்புக்களும் தொற்றுக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கேகாலையில் பிரபல்யமான மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரதான மருத்துவராகிய டொக்டர் பத்ம ஷாந்த என்பவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் அவர் தொற்றுக்கு இலக்காகி கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய பலருக்கு இவர் சிகிச்சையளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
