தொடர்ச்சியாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி!
Sri Lankan rupee
Exchange Rate
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
Dollars
By Kathirpriya
சிறிலங்காவில் உள்ள வங்கிகளில் இன்று(21) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் (20) ஒப்பிடுகையில் 315.80 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 317.26 ரூபாயாகவும் விற்பனை விலை 331.34 ரூபாயிலிருந்து 332.87 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
வர்த்தக வங்கியின் கூற்று
வர்த்தக வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 317.20 ரூபாயிலிருந்து 318.19 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலையும் 329.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே 319 மற்றும் 332 ரூபாயாக அதிகரித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி