ராஜபக்சக்கள் மீது குற்றம் சுமத்தாதே... கொழும்பில் போராட்டத்தில் குதித்த தேரர் (படங்கள்)
பிரித்தானியாவின் சனல் 4 அலைவரிசையில் ராஜபக்ச மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட செய்தி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கம் இன்று (7) பிற்பகல் போராட்டம் நடத்தியது.
இந்த போராட்டமானது இன்று (7) பிற்பகல் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
கடும் மழைக்கு மத்தியிலும் இயக்கத்தின் உறுப்பினர்கள், பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
உயர்ஸ்தானிகராலயத்திடம் மகஜர்
விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை போஷிக்காதே, சனல்-4க்கு எதிராக எழுந்திரு, சனல்-4வின் சதியை தோற்படிப்போம், நல்லிணக்கத்தை பிரித்தானியா வெறுக்கிறாதா? உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக தமது அமைப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவில்லை எனவும் சனல்-4 ஊடகத்தின் நடவடிக்கைகளை மாத்திரம் எதிர்ப்பதாகவும் இயக்கத்தின் உறுப்பினரான உடுகல்லே ஸ்ரீ ஜின்னாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அங்குபகல்ல சிறி ஜினானந்தா மகஜர் ஒன்றையும் கையளித்தார்.