தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம்: தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை

United Nations Sri Lankan Tamils Selvam Adaikalanathan Sri Lanka
By Shadhu Shanker Aug 29, 2024 04:59 AM GMT
Report

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா (UN) அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ (RELO) கோரிக்கை விடுத்துள்ளது.

“எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எமது தரப்பில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு சமர்ப்பிப்பதற்கான அறிக்கையின் மாதிரி வடிவம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பல நாட்களுக்கு முன்னரே எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதியை வலுயுறுத்தி ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்…

நீதியை வலுயுறுத்தி ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்…

மனித உரிமைப் பேரவை

கடந்த வாரம் உயர்ஸ்தானிகராலய அலுவலர்களுடன் இணைய வழியில் நடைபெற்ற சந்திப்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நாடாளுமன்ற உறுப்பினர், குருசுவாமி சுரேந்திரன் பேச்சாளர் ரெலோ, மற்றும் பிரான்ஸிலிருந்து (France) ஏற்பாட்டாளர் மகேந்திரன் குலராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இருந்தனர்.

சில காரணங்களினால் மற்ற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை.

இருப்பினும் சந்திப்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களின் தற்போதைய நிலை, தொடர்ந்தும் மீறப்பட்டு வரும் மனித உரிமை விடயங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

மனித உரிமைப் பேரவைக்கு சமர்பிக்க தயாராகி இருந்த ஐ.நா மனித உரிமை (OHCHR) உயர்ஸ்தானிகரின் அறிக்கையும் அதில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பே பொது வேட்பாளர்! சிறீதரன் சுட்டிக்காட்டு

இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பே பொது வேட்பாளர்! சிறீதரன் சுட்டிக்காட்டு

தமிழ் மக்கள்

எதிர்வரும் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு முதலாக எமது தரப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.

தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம்: தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை | Don T Ignore Un Rights Amid Elections Relo

நல்லிணக்கம் மற்றும் பொறப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளையும் சர்வதேசத்துக்கு சொல்வதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அதில் பொது வேட்பாளரும் ஒரு பொறிமுறையாக கையாளப்படுகிறது. இந்த நேரத்தில் மனித உரிமை பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கான மிகப் பிரதான தளமாக அமைந்திருக்கிறது.

சர்வதேச நாடுகள் பொறுப்புக் கூறல் மற்றுமை நல்லிணக்கம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை ஜனாதிபதி தேர்தல் விடயங்களினால் நாம் மறந்து விடல் ஆகாது.

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

யுத்தக் குற்றங்கள்

யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றோடு எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஐ.நாப் பொறிமுறை மற்றும் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளில் மனந்தளராது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டு காத்திருக்கும் எமது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற எமது காத்திரமான தொடர் நடவடிக்கைகள் அவசியமாகும்.

தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம்: தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை | Don T Ignore Un Rights Amid Elections Relo

மிகக் கடினமான தேர்தல் விடயங்களை கையாளும் பொழுதிலும் எமது இன நலன் சார்ந்த பிரதானமான ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் எமது மக்கள் சார்பாக அறிக்கைகள் இடம் பெறுவது தேர்தல் நலன்களையும் தாண்டி முக்கியமானதாகும்.

ஆகவே அனைத்துத் தமிழ்த் தேசியப் பரப்பிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் ஆகியோரை இந்த பேரவை கூட்டத் தொடருக்கான அறிக்கை சமர்ப்பிக்கும் எமது முயற்சியில் கைகோர்க்குமாறு வினயமாக வேண்டுகிறோம். ” குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025